2019 ஆம் ஆண்டு முடிவடைந்து 2020 ஆம் ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் சாதித்த நபர்கள் குறித்த தகவல்கள் பல்வேறு அமைப்புகளால் வெளியிடப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கிரிக்கெட் உலகை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணியும் இந்திய வீரர்களும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். அப்படி, கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள்,டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் என அனைத்தையும் சேர்த்து அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

ganguly appreciates ashwin

Advertisment

Advertisment

அதில் 564 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீரர் அஸ்வின் முதலிடத்தில் உள்ளார். மேலும் இந்த டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மட்டுமே. இந்நிலையில் இதனை பாராட்டும் விதமாக பிசிசிஐ தலைவர் கங்குலி ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், "கடந்த 10 ஆண்டுகளில் அதிகமான சர்வதேச விக்கெட்டுகளை அஸ்வின் ரவிச்சந்திரன் வீழ்த்தியுள்ளார். என்ன அருமையான ஒரு உழைப்பு. நினைக்கவே பெருமையாக இருந்தாலும், சிலநேரங்களில் இதுபோன்றவை கவனிக்கப்படாமல் போகிறது" என தெரிவித்துள்ளார்.