அடுத்த பகலிரவு டெஸ்ட் போட்டி எங்கு நடைபெறுகிறது? கங்குலி பதில்!

ganguly

இந்தியாவில் அடுத்த பகலிரவு டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில், டெஸ்ட் போட்டிகளை அகமதாபாத், தர்மஷாலா மற்றும் கொல்கத்தா மைதானங்களில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் இது குறித்தும், பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறும் இடம் குறித்தும்கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குபதிலளித்த கங்குலி, "தற்காலிகமாக சில திட்டங்கள் உள்ளன. இன்னும் அவை உறுதி செய்யப்படவில்லை. பகலிரவு போட்டியானது அகமதாபாத்தில் நடைபெறும். இதற்கு இன்னும் நான்கு மாத காலம் இருக்கிறது. இங்கிலாந்து தொடருக்கு முன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் வரவிருக்கிறது. அதற்கான அணித் தேர்வு இன்னும் சில நாட்களில் நடக்க இருக்கிறது" எனக் கூறினார்.

sourav ganguly
இதையும் படியுங்கள்
Subscribe