Advertisment

ரஞ்சி ட்ராபியில் விளையாடுங்கள் - அணியின் மூத்த வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய கங்குலி!

ganguly

Advertisment

கரோனாபரவல் காரணமாக ரஞ்சி ட்ராபிகிரிக்கெட் போட்டிகள் இந்தாண்டுஇரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்டம் இம்மாதம் 10 ஆம் தேதி முதல் மார்ச் 15 ஆம் தேதி வரையும், இரண்டாவது கட்ட போட்டிகள் மே 30 ஜூன் 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தநிலையில்பிசிசிஐ தலைவர் கங்குலி, அண்மைக்காலமாக ஃபார்ம் இன்றி தவித்து வரும் ரஹானேவும், புஜாராவும் ரஞ்சி ட்ராபியில் விளையாட வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். இதுதொடர்பான ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கங்குலி கூறியுள்ளதாவது; அவர்கள் இருவரும் மிகவும் சிறந்த வீரர்கள். அவர்கள் மீண்டும் ரஞ்சி டிராபிக்கு சென்று நிறைய ரன்கள் எடுப்பார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் அதை நிச்சயம் செய்வார்கள். ரஞ்சி ட்ராபிக்கு திரும்பி செல்வதில் அவர்களுக்கு எந்த பிரச்சனையும்இருப்பதாக தெரியவில்லை.

அவர்கள் கடந்த காலங்களில், ஒருநாள்மற்றும் இருபது ஓவர் போட்டி அணிகளுக்கான அணியில் இடம் பெறாமல் டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடி கொண்டிருந்தபோதும்கூட ரஞ்சி போட்டியில் விளையாடியுள்ளனர். எனவே அவர்களுக்கு அதில் பிரச்சனை இருக்காது. இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.

pujara
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe