Skip to main content

ரஞ்சி ட்ராபியில் விளையாடுங்கள் - அணியின் மூத்த வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய கங்குலி!

Published on 04/02/2022 | Edited on 04/02/2022

 

ganguly

 

கரோனா பரவல் காரணமாக ரஞ்சி ட்ராபி கிரிக்கெட் போட்டிகள் இந்தாண்டு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்டம் இம்மாதம் 10 ஆம் தேதி முதல் மார்ச் 15 ஆம் தேதி வரையும், இரண்டாவது கட்ட போட்டிகள் மே 30 ஜூன் 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

 

இந்தநிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி, அண்மைக்காலமாக ஃபார்ம் இன்றி தவித்து வரும் ரஹானேவும், புஜாராவும் ரஞ்சி ட்ராபியில் விளையாட வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். இதுதொடர்பான ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கங்குலி கூறியுள்ளதாவது; அவர்கள் இருவரும் மிகவும் சிறந்த வீரர்கள். அவர்கள் மீண்டும் ரஞ்சி டிராபிக்கு சென்று நிறைய ரன்கள் எடுப்பார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் அதை நிச்சயம் செய்வார்கள். ரஞ்சி ட்ராபிக்கு திரும்பி செல்வதில் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை.

 

அவர்கள் கடந்த காலங்களில், ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டி அணிகளுக்கான அணியில் இடம் பெறாமல் டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடி கொண்டிருந்தபோதும் கூட ரஞ்சி போட்டியில் விளையாடியுள்ளனர். எனவே அவர்களுக்கு அதில் பிரச்சனை இருக்காது. இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கங்குலியின் பயோ-பிக்கை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

Aishwarya Rajinikanth to direct Ganguly's bio-pic

 

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கங்குலியின் பயோ-பிக்கை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கவுள்ளதாகக் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. கங்குலி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன், சித்தார்த் மல்ஹோத்ரா அல்லது ரன்பீர் கபூர் யாரேனும் ஒருவர் நடிப்பார்கள் எனச் சொல்லப்பட்டது.  

 

பின்பு ரன்பீர் கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் படப்பிடிப்பு கொல்கத்தாவில் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து விளக்கமளித்த ரன்பீர் கபூர், "கங்குலி ஒரு லெஜண்ட். அவரது வாழ்க்கை திரைப்படமாக உருவாவது மிகவும் சிறப்பான ஒன்று. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை" எனத் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் இப்படத்தில் கங்குலி கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிக்கவுள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளதாகவும் டிசம்பரில் இருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அடுத்த மாதம் கதாபாத்திரத்திற்கான பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து  'ஓ சாத்தி சல்' என்ற தலைப்பில் இந்தியில் ஒரு படம் பண்ணவுள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஆனால் அதன் பிறகு அந்த படம் தொடர்பான எந்த அப்டேட்டும் வெளிவரவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இதில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வருகிறது என்பதும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 


 

Next Story

டெஸ்ட்டில் மீண்டும் ரஹானே; தேர்வுக்கு பின்னணியில் தோனி; வெளியான தகவல்

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

Rahane back in Test; Dhoni in the background for the selection; Released information

 

நடப்பு ஐபிஎல் தொடரில் ரஹானே தொடர்ந்து அசத்தி வருகிறார். கொல்கத்தா உடனான போட்டியில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் சென்னை அணிக்காக அதிவேக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை மொயின் அலியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதற்கு முன் சுரேஷ் ரெய்னா 16 பந்துகளில் அரைசதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். 

 

கொல்கத்தா உடனான போட்டியில் 29 பந்துகளில் 71 ரன்களைக் குவித்து 244 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடிய ரஹானே, நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்ரேட் கொண்டவர் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் 5 இன்னிங்ஸில் 209 ரன்களை குவித்து 199.04 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதலிடத்தில் ரஹானே நீடிக்க 198.03 உடன் ஷர்துல் தாக்கூர் இரண்டாமிடத்தில் நீடிக்கிறார்.

 

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை இந்திய அணியும் அறிவித்தது. அதில் ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படுவதால் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இந்திய அணியில், “ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சித்தேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எல்.ராகுல், பரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட்” ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

 

டெஸ்ட் அணியில் காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டதன் காரணமாக மீண்டும் இந்திய அணியில் தனது காலடியை ரஹானே பதிக்க உள்ளார். ரஹானே கடைசியாக இந்தியாவின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு பின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டு நடந்த நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடிய ரஹானே முதல் இன்னிங்ஸில் 49 ரன்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 15 ரன்களை எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. 

 

இந்நிலையில், ரஹானே இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டதற்கு பின்னணியில் தோனி இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் ரஹானேவின் பெயரை சேர்ப்பதற்கு முன் பிசிசிஐ தேர்வாளர்கள் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி கேப்டன் தோனியுடன் கலந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

முன்னதாக ரஹானே ரஞ்சி டிராபியில் 7 போட்டிகளில் விளையாடி 634 ரன்கள் குவித்துள்ளார். சராசரியாக 57 ரன்களை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.