ganguly

இந்தியகிரிக்கெட்அணியின்முன்னாள் கேப்டனும், இந்தியகிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ்கங்குலி, மாரடைப்பு காரணமாககொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கங்குலியின் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைசெய்யப்பட்டு ஒரு அடைப்பு சரி செய்யப்பட்டது.

Advertisment

கங்குலிஇதயத்தில் இருக்கும்மேலும் இரண்டு அடைப்புகளைசரி செய்யஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அவசியம் என்றாலும், அவர் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாலும், இதயத்தில் வலி இல்லாமல் இருப்பதாலும்,சில நாட்கள் அல்லது வாரங்களுக்குப் பிறகு, அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யலாம் எனமருத்துவக் குழு முடிவு செய்தது.

இதனையடுத்து கங்குலிடிஸ்சார்ச் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment