ADVERTISEMENT

"உலகக்கோப்பைல இவங்க மூணு பேரும் சேர்ந்து கலக்குவாங்க"- கங்குலி உற்சாகம்...

12:12 PM May 15, 2019 | kirubahar@nakk…

வரும் மே 30 ஆம் தேதி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில் அனைத்து நாட்டு வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணி வீரர்கள் விரைவில் பயிற்சியை தொடங்கவுள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் கோலியின் கேப்டன்ஷிப் பெரிதும் விமர்சிக்கப்பட்ட நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலியிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், "ஐபிஎல் தொடருக்கும், உலகக்கோப்பைக்கும் எந்த தொடர்பில்லை. விராட் கோலியின் ஐபிஎல் அனுபவங்கள் எக்காரணம் கொண்டும் உலகக்கோப்பையை பாதிக்காது என நான் கருதுகிறேன். ஒருநாள் போட்டிகளில் கோலியின் சாதனைகள் இதுவரை சிறப்பாகவே இருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் தோனியின் அனுபவம், ரோஹித் ஷர்மாவின் துணை ஆகியவை கோலிக்கு பக்கபலமாக இருக்கும். இந்த மூவர் கூட்டணியை வெல்வது கடினமே. அதுபோல ஹர்திக் பாண்டியா நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர்" என கூறினார்.

மேலும் இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடும் நிலையில், இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் எப்படி இருக்கும் என கேட்ட போது, "இங்கிலாந்து மைதானத்தில் பாகிஸ்தான் எப்போதும் சிறப்பாகவே விளையாடும் என்பது அவர்களது கடந்தகால சாதனைகளை பார்த்தாலே நமக்கு தெரியும். இருந்தாலும் கோலி, தவான், தோனி, ரோஹித் போன்ற வீரர்களை வைத்திருக்கும் இந்தியாவை அவ்வளவு எளிதாக அவர்கள் வீழ்த்த முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT