Advertisment

"இப்போது ஒரு புதிய அதிரடி பேட்ஸ்மென் நம்முடன் இருக்கிறார்" - கங்குலியின் பாராட்டைப் பெற்ற தோனி...

ganguly about dhoni in 2004

Advertisment

தோனி எதிர்காலத்தில் மிகப்பெரிய நட்சத்திரமாக வருவார் என 2004 ஆம் ஆண்டே கங்குலி கூறியதாகக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஜாய் பட்டாச்சார்யா கூறியுள்ளார்.

தோனியை அடையாளம் கண்டு இந்திய அணியில் அவருக்கென ஒரு இடத்தைப் பெற்றுக்கொடுத்ததில் முக்கிய பங்குடையவர் கங்குலி. ஆரம்பம் முதலே தோனியின் ஆட்டத்திறன் மீது அவர் கொண்ட நம்பிக்கையும், மூன்றாம் இடத்தில் அவரை இறக்கி ஆட வைத்ததும் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமானவை ஆகும். இந்நிலையில் தோனி எதிர்காலத்தில் மிகப்பெரிய நட்சத்திரமாக வருவார் என 2004 ஆம் ஆண்டே கங்குலி கூறியதாகக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஜாய் பட்டாச்சார்யா கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், "தோனியை ஆரம்பத்திலேயே கங்குலி அடையாளம் கண்டு கொண்டார். 2004-இல் வங்கதேச பயணத்தின்போது விமானத்தில் நான் கங்குலியுடன் இருந்தே. அப்போது, என்னிடம் பேசிய கங்குலி, இப்போது ஒரு புதிய அதிரடி பேட்ஸ்மென் நம்முடன் இருக்கிறார். அவர் ஆட்டத்தை நீங்கள் பார்க்க வேண்டும். தோனி ஒரு ஸ்டாராக உருவெடுப்பார் எனக் கூறினார்" எனத் தெரிவித்துள்ளார்.

Ganguly Dhoni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe