அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

Advertisment

gangulu tweet about team india's squad for westindies series

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி, இந்திய அணியில் சுப்மான் கில் மற்றும் ரஹானேவை ஏன் அணியில் சேர்க்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சுற்றுப்பயணத்திற்கான அணி அறிவிக்கப்பட்ட போதே ரசிகர்களும் இதே கேள்வியை கேட்ட நிலையில், தற்போது கங்குலியும் இதே கேள்வியை எழுப்பியுள்ளார்.

Advertisment

இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அணியில் சுப்மான் கில், அஜின்கயே ரஹானே இருவரையும் தேர்வு செய்யாமல் விட்டிருப்பது வியப்பை அளிக்கிறது. அணியில் நம்பிக்கை, வலிமையை அதிகரிக்க மூன்று விதமான கிரிக்கெட் ஃபார்மெட்டுகளிலும் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்களை அணியில் சேர்க்க வேண்டும். சிறந்த அணிக்கு, நிலைத்தன்மையுடன் விளையாடும் வீரர்கள் அவசியம்" என பதிவிட்டுள்ளார்.