Advertisment

"தோனியை அதற்காக பாராட்டியே ஆக வேண்டும்" - கம்பீர் பேச்சு...

gambir about dhoni backing kohli

2014 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் நிறைய பேருடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும், ஆனால் அப்போது தோனி எடுத்த முடிவை பாராட்டியே ஆக வேண்டும் என கம்பீர் தெரிவித்துள்ளார்.

Advertisment

தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீரிடம், கோலியின் டெஸ்ட் வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அதற்கு பதிலளித்த அவர், 2014 காலகட்டத்தில் கோலி டெஸ்ட் போட்டிகளில் சொதப்பியதையும், அப்போது தோனி கொடுத்த ஆதரவையும் பற்றி குறிப்பிட்டார். இந்த பேட்டியில், "2014 தொடரில் விளையாடிய அணியில் நானும் இருந்தேன். அந்தத் தொடரில் தோனிக்கு நாம் பாராட்டு தெரிவித்தே ஆக வேண்டும், ஏனெனில் இந்திய வீரர்கள் நிறைய பேருடைய கிரிக்கெட் வாழ்க்கை அப்போது முடிவுக்கு வந்திருக்கும். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில். அந்த காலகட்டத்தில் தோனிதான் கோலியை மிகவும் ஆதரித்தார், இல்லையெனில் கோலியின் டெஸ்ட் வாழ்க்கை அந்தத் தொடரோடு முடிந்திருக்கும்" என தெரிவித்துள்ளார்.

Advertisment

Dhoni virat kohli
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe