Advertisment

மனதில் பெரிய ஜேம்ஸ்பாண்ட்னு நினைப்பு - கம்பீரை வம்பிழுத்த அப்ரிதி!

சில தினங்களுக்கு முன்பு சச்சினை அவுட் ஆக்கியது தொடர்பாக தவறான தகவல் கொடுத்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் சர்ச்சையில் சிக்கிக்கொண்ட நிலையில், தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிதி இந்திய அணியின் முன்னாள் வீரர் காம்பீர் தொடர்பாக ஒரு சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். கேம் சேஞ்சர் என்று அவர் வெளியிட்டுள்ள ஒரு புத்தகத்தில் கவுதம் கம்பீர் தொடர்பான அவதூறான கருத்துகள் இடம் பெற்றுள்ளன.

Advertisment

c

அதில், "கம்பீரிடம் எப்போதும் நல்ல எண்ணங்கள் இல்லை, எந்தவித தனித்துவமான குணநலன்களும் அவரிடம் இல்லை. அவரை போன்ற வீரர்கள் கிரிக்கெட்டில் எப்போதாவதுதான் வருவார்கள். அவரிடம் எந்த தனித்துவமான சாதனைகளும் இல்லை. ஆனால் மனதில் ஜேம்ஸ்பாண்ட், பிராட்மேன் போன்ற நினைப்பு அவருக்கு அதிகம் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள கம்பீர், " பொய் பேசுபவர்கள், ஆதிக்கம் செலுத்த விரும்புபவர்கள் மீது எனக்கு எப்போதும் திமிர் இருக்கும், அதைதவிர வேறு தீய எண்ணங்கள் எனக்கு எப்போதும் இருந்ததில்லை" என்று தெரிவித்துள்ளார்.

Advertisment
Shahid Afridi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe