Skip to main content

2023 ஐபிஎல் வீரர்கள் முழுப்பட்டியல்; ஒவ்வொரு அணியிலும் உள்ள வீரர்கள் யார் யார்?

Published on 24/12/2022 | Edited on 24/12/2022

 

Full list of players of IPL teams

 

2023 இல் நடைபெறவிருக்கும் 15வது ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் நேற்று கொச்சியில் நடந்தது. இந்த ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கர்ரன் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 18.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். அவருக்கு அடுத்தபடியாக 17.50 கோடி ரூபாய்க்கு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், 16.25 கோடி ரூபாய்க்கு இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் ஏலம் எடுக்கப்பட்டனர். ஒவ்வொரு அணியும் மேலும் சில வீரர்களை ஏலத்தில் எடுத்ததைத் தொடர்ந்து 2023 ஐபிஎல் 15வது சீசனில் விளையாடும் ஐபிஎல் அணிகளின் மொத்த வீரர்களின் பட்டியல் இறுதியாகியுள்ளது. ஒவ்வொரு அணிகளிலும் உள்ள வீரர்களின் விவரம் பின்வருமாறு...

 

சென்னை சூப்பர் கிங்ஸ்: மகேந்திர சிங் தோனி (கே), ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சாஹர், டெவோன் கான்வே, பென் ஸ்டோக்ஸ், அம்பத்தி ராயுடு, மொயின் அலி, மஹீஷ் தீக்‌ஷன, சிவம் துபே, கைல் ஜேமிசன், ட்வைன் ப்ரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், அஜிங்க்யா ரஹானே, பகத் வர்மா, அஜய் மண்டல், நிஷாந்த் சிந்து, ஷேக் ரஷீத், சுப்ரான்ஷு சேனாபதி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரி, மதீஷா பதிரன, சிமர்ஜீத் சிங், பிரசாந்த் சோலங்கி.

 

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கே), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஜஸ்பிரிட் பும்ரா, பியூஷ் சாவ்லா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜை ரிச்சர்ட்சன், கேமரூன் கிரீன், டிம் டேவிட், டெவால்ட் ப்ரீவிஸ், ஜேசன் பெரன்டோர்ஃப், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டுவான் ஜேன்சன், ராகவ் கோயல், நேஹால் வதேரா, ஷாம்ஸ் முலானி, விஷ்ணு வினோத், ரமன்தீப் சிங், திலக் வர்மா, அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஷத் கான், குமார் கார்த்திகேயா, ஹிருத்திக் ஷோக்கீன், ஆகாஷ் மத்வால்.

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஃபாப் டு ப்ளெஸ்ஸிஸ் (கே), விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், ஹர்சல் படேல், தினேஷ் கார்த்திக், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட், வனிந்து ஹசரங்க, ஃபின் ஆலன், ரஜத் படிதார், சோனு யாதவ், அவினாஷ் சிங், ராஜன் குமார், மனோஜ் பந்தேஜ், வில் ஜாக்ஸ், ஹிமான்ஷு ஷர்மா, ரீஸ் டாப்லே, சுயாஷ் பிரபுதேசாய், அனுஜ் ராவத், ஷாபாஸ் அகமது, டேவிட் வில்லி, கர்ன் ஷர்மா, மஹிபால் லோம்ரோர், சித்தார்த் கவுல், ஆகாஷ் தீப்.

 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தர், உம்ரான் மாலிக், மயங்க் அகர்வால், ஹாரி ப்ரூக், ஆதில் ரஷித், ஹென்ரிச் க்ளாசென், அய்டன் மார்க்ரம், க்ளென் ஃப்லிப்ஸ், ராகுல் திரிபாதி, அப்துல் சமத், அன்மோல்ப்ரீத் சிங், அகேல் ஹொசைன், நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் டாகர், உபேந்திர யாதவ், சன்வீர் சிங், சமர்த் வியாஸ், விவ்ராந்த் சர்மா, மயங்க் மார்கண்டே, அபிஷேக் சர்மா, மார்கோ ஜான்சன், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, கார்த்திக் தியாகி.

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஷ்ரேயாஸ் ஐயர் (கே), வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரேன், ஷர்துல் தாக்கூர், ஷாகிப் அல் ஹசன், நிதிஷ் ராணா, லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி, டிம் சௌதி, லிட்டன் தாஸ், என்.ஜெகதீசன், டேவிட் வீஸ், மந்தீப் சிங், குல்வந்த் கெஜ்ரோலியா, சுயாஷ் சர்மா, வைபவ் அரோரா, ரஹ்மானுல்லா குர்பாஸ், ஹர்ஷித் ராணா, அனுகுல் ராய், ரிங்கு சிங்.

 

ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கே), ஜோஸ் பட்லர், ட்ரெண்ட் போல்ட், யஸ்வேந்திர சாஹல், ஜோ ரூட், ரவிச்சந்திரன் அஷ்வின், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரோன் ஹெட்மயர், தேவ்தத் படிக்கல், ஜேசன் ஹோல்டர், பிரஷித் கிருஷ்ணா, ஆடம் ஜாம்பா, ரியான் பராக், முருகன் அஷ்வின், நவ்தீப் சைனி, கே.எம்.ஆசிப், டோனோவன் ஃபெரீரா, ஓபேட் மெக்காய், அப்துல் பி.ஏ., ஆகாஷ் வசிஷ்ட், குணால் ரத்தோர், துருவ் ஜூரல், குல்தீப் சென், குல்தீப் யாதவ், கே.சி.கரியப்பா.

 

டெல்லி கேபிடல்ஸ்: ரிஷப் பண்ட் (கே), டேவிட் வார்னர், ப்ரித்வி ஷா, ரைலீ ரஸ்ஸோவ், அக்சர் படேல், அன்ரிச் நோர்ட்யா, மணீஷ் பாண்டே, மிட்செல் மார்ஷ், முஸ்தபிசுர் ரஹ்மான், குல்தீப் யாதவ், கலீல் அஹ்மத், லுங்கி எங்கிடி, இஷாந்த் சர்மா, ஃபில் சால்ட், ரிபால் படேல், ரோவ்மன் பவல், சர்ஃபராஸ் கான், முகேஷ் குமார், யாஷ் துல், லலித் யாதவ், சேத்தன் சகாரியா, கமலேஷ் நாகர்கோட்டி, அமன் கான், பிரவீன் துபே, விக்கி ஓஸ்ட்வால்.

 

பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான் (கே), சாம் கர்ரன், ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டன், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், ஷாருக் கான், சிக்கந்தர் ராசா, நாதன் எல்லிஸ், பானுக ராஜபக்ச, சிவம் சிங், மொஹித் ரதீ, வித்வத் கவேரப்பா, ஹர்ப்ரீத் பாட்டியா, பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா, ராஜ் பாவா, ரிஷி தவான், அதர்வா டைடே, பால்தேஜ் சிங்,  ஹர்ப்ரீத் பிரார்.

 

குஜராத் டைட்டன்ஸ்: ஹர்திக் பாண்ட்யா (கே), டேவிட் மில்லர், ஷுப்மன் கில், மேத்யூ வேட், கேன் வில்லியம்சன், ரஷித் கான், முகமது ஷமி, வ்ருதிமான் சாஹா, ராகுல் தெவாட்டியா, சாய் சுதர்சன், ஆர்.சாய்கிஷோர், சிவம் மவி, மோஹித் சர்மா, ஒடியன் ஸ்மித், அல்சாரி ஜோசப், அபினவ் மனோகர், விஜய் சங்கர், கே.எஸ்.பரத், யாஷ் தயாள், பிரதீப் சங்வான், தர்ஷன் நல்கண்டே, ஜெயந்த் யாதவ்,  நூர் அகமது, ஜோஷ்வா லிட்டில், உர்வில் பட்டேல்.

 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கே.எல்.ராகுல் (கே),  தீபக் ஹூடா, குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மார்க் வுட், நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், டேனியல் சாம்ஸ், ஜெய்தேவ் உனத்கட், க்ருணால் பாண்ட்யா, அவேஷ் கான், அமித் மிஸ்ரா, கிருஷ்ணப்ப கவுதம், கைல் மேயர்ஸ், ரோமாரியோ ஷெப்பர்ட், யுத்வீர் சரக், நவீன் உல் ஹக், ஸ்வப்னில் சிங், ப்ரேரக் மான்கட், யாஷ் தாக்கூர், ஆயுஷ் படோனி, கரண் ஷர்மா, மனன் வோரா, மொஹ்சின் கான், மயங்க் யாதவ்.

 

 

 

Next Story

“ரோஹித்துக்கு பிறகு இந்திய அணிக்கு கேப்டனாக இவரே தகுதியானவர்” - ஹர்பஜன் சிங் கருத்து

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

ஐபிஎல் 2024 இன் 38 வது லீக் ஆட்டம் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று (22-04-24) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பாண்டியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்த அணியில் புதிதாக துஷாரா, நெகல் வதீரா சேர்க்கப்பட்டனர்.

மும்பை அணிக்கு தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் இஷான் களமிறங்கினர். ரோஹித் 6 ரன்களிலும், இஷான் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். பின்னர், வந்த முகமது நபி 23 ரன்கள் அடித்து ஓரளவு கை கொடுக்க, அதன் பிறகு திலக் வர்மாவும், நெகல் வதீராவும் பார்ட்னர்ஷிப் அமைத்து 99 ரன்கள் சேர்த்தனர். இதன் காரணமாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் சிறப்பாக வந்து வீசிய சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

பின்னர், 180 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. பட்லரும், ஜெயிஸ்வாலும் இணைந்து அதிரடியாக ஆடத் தொடங்கினர். சிறப்பாக ஆடிய பட்லர் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர், வந்த கேப்டன் சஞ்சு சாம்சனுடன் உடன் இணைந்து ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடத் தொடங்கினார். மும்பை அணியின் பந்துவீச்சை பதம் பார்த்த அவர், 60 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். அவருக்கு துணை நின்ற கேப்டன் சஞ்சு சாம்சங், 38 ரன்கள் எடுத்தார். 18. 4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்த ராஜஸ்தான் அணி 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் ஜெய்ஸ்வாலுக்கு இது ஐ.பி.எல்.லில் இரண்டாவது சதம் ஆகும். இந்த இரண்டு சதங்களும் மும்பை அணிக்கு எதிராக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 14 புள்ளிகள் பெற்று தர வரிசை பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

இதற்கிடையில், இந்திய உலகக் கோப்பை டி 20 அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். உலகக் கோப்பை டி20 அணிக்கு ரோஹித் கேப்டனாக செயல்பட இருக்கிறார். இந்த உலகக் கோப்பை டி20க்குப் பிறகு ரோஹித் டி20 விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், இந்திய அணியின் டி20 அணிக்கு யார் கேப்டனாக வருவார் என்ற பேச்சு எழுந்தும் வருகிறது. இடையில் பாண்டியா டி20 அணிக்கு கேப்டனாக சில போட்டிகளுக்கு நியமிக்கப்பட்டார். ஆனால், தற்போது கேப்டனாக அவரின் செயல்பாடுகள் மற்றும் வீரராக அவரின் செயல்பாடுகள் மந்தமாக உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், காயத்தால் அடிக்கடி அவதிப்படுகிறார் என்பதாலும் இந்திய அணிக்கு வேறு கேப்டனை தேர்வு செய்ய பி.சி.சி.ஐ யோசிப்பதாக கூறப்படுகிறது.

Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

இந்த நிலையில், தற்போது இந்திய அணிக்கு அடுத்து யாரை டி20 கேப்டனாக நியமிக்கலாம் என்று ஹர்பஜன்சிங் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே பார்ம் என்பது தற்காலிகம் தான். அவரின் திறமை தான் நிரந்தரம். மேலும், இந்திய டி20 அணிக்கு சஞ்சு சாம்சனை நிச்சயம் எடுக்க வேண்டும். மேலும் இந்திய அணிக்கு ரோஹித்துக்குப் பிறகு டி20 அணிக்கு கேப்டனாக சஞ்சு சாம்சனை வளர்த்தெடுக்க வேண்டும்” என்றார். இது சரிதான் என்கிற வகையில் ரசிகர்களும் அவருடைய பதிவில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

தங்கராசு நடராஜனை தங்கத்தால் ஜொலிக்க வைத்த சன் ரைசர்ஸ்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
 Sunrisers made Thangarasu Natarajan shine with gold!

தமிழ்நாட்டு வீரர் நடராஜனுக்கு சன் ரைசர்ஸ் அணியால் 80 சவரன் தங்க சங்கிலியுடன் கூடிய மெடல் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 
 
ஐபிஎல் 2024இன் 35 ஆவது லீக் ஆட்டம் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே கடந்த 20 ஏப்ரல் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி வழக்கம் போல அட்டகாசமாய் ஆரம்பித்தது. பவர்பிளேயின் முதல் 6 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்து, பவர்பிளேயில் அதிக ரன்கள் எடுத்த அணி என்கிற கொல்கத்தா அணியின் சாதனையை முறியடித்தது. ஹெட் 32 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். நித்திஷ் ரெட்டி 37, ஷபாஸ் அகமது 59 என மிரட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் குல்தீப் 4 விக்கெட்டுகளும், அக்சர், முகேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் இமாலய இலக்கை எதிர்கொண்ட டெல்லி அணிக்கு அந்த அணியின் ஜேக் ஃப்ரேசர் 65 அபிஷேக் பொரேல் 42, பண்ட் 41 தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாகப் பந்து வீசிய நடராஜன் 4 ஓவர்களில் வெறும் 19 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முன்னாள் வீரர் புவனேஷ்வர் குமார் உட்பட மூத்த வீரர்கள் பலரும் அவரது பந்து வீச்சைப் பாராட்டினர்.

ஐபிஎல் போட்டிகள் முடிந்த பின்பு ட்ரெஸ்ஸிங் ரூமில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைப் பாராட்டி அந்த அணியின் வீரர்கள் கவுரவிக்கப்படுவதும், அதை வீடியோ எடுத்து அணிகள் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிடுவதும் தற்போது டிரெண்டாகி வருகிறது. மற்ற அணிகள் சிறிய அளவிலான தங்க பேட்சுகள் மற்றும் இதர பரிசுகளை வழங்கி வருகிறது. ஆனால், சன் ரைசர்ஸ் அணி ஒருபடி மேலே போய் ஒரு பெரிய தங்க சங்கிலியையே பரிசாக நடராஜனுக்கு வழங்கி கவுரவம் செய்துள்ளது. 80 பவுன் எடை கொண்ட தங்க சங்கிலியை நடராஜனுக்கு அணிவித்து, அவர் அந்த சங்கிலியுடன் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.