Advertisment

இந்தியா ஏன் தொடர்ந்து சொதப்புகிறது? - நான்கு காரணங்கள்

இங்கிலாந்து சுற்றுப்பயணம் குறித்த செய்த வெளியானபோதே, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு வலுத்தது. ஒரு கிளாசிக் ஆட்டத்தைப் பார்க்கும் வாய்ப்பு என்பது மிக அரிதானது. அதிலும் குறிப்பாக லிமிட்டெட் ஓவர் கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தியிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில், டெக்னிக்கல் விளையாட்டை ஊக்குவிக்கும் டெஸ்ட் போட்டிகளின் மீது எதிர்பார்ப்பு குவிவதில் வியப்பேதும் இல்லை.

Advertisment

India

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

ஆனால், இந்த எதிர்பார்ப்பை இந்திய அணி பாசிட்டிவ்வாக கையாண்டதா? என்று கேட்டால் இல்லை. ஒருநாள் தொடரை இழந்த கையோடு, அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்றிருக்கிறது இந்திய அணி. அணியில் தீர்க்கப்பட வேண்டிய ஏராளமான பிரச்சனைகள் வரிசைக்கட்டி நிற்கின்றன. மீதமிருக்கும் மூன்று போட்டிகளில் கட்டாய வெற்றி பெறுவது மட்டுமே இந்திய அணியின் மீது திரும்பியிருக்கும் மோசமான விமர்சனங்களுக்கு பதிலளிக்கக் கிடைத்துள்ள ஒரே வாய்ப்பு. அதிலும், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக தோல்வியைச் சந்தித்திருக்காத அணி என்பதால், அந்தக் கட்டாயமும் இந்திய அணிக்கு இருக்கிறது.

இந்திய அணியின் சொதப்பலுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் முக்கியமான நான்கு காரணங்களை இதோ பட்டியலிட்டிருக்கிறோம். ஒருவேளை வேறு காரணம் இருந்தால், அதை கமெண்டிடலாம்..

ஓப்பனிங் சோதனைகள்

Virat

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இங்கிலாந்தின் சூழல், காற்று வீசும் வேகம், ஈரப்பத நிலை என எல்லாமும் ஒன்றுசேர்ந்து வேகப்பந்து வீச்சுக்கு ஏதுவாக இருக்கின்றன. அங்கு எந்த வேளையில் பந்துவீசினாலும் ஸ்விங் ஆகும் என்பதால், புதிய பந்தை எதிர்கொள்ளும் ஓப்பனிங் வீரர்கள் தவறான ஸாட்களைக் கூட பவுண்டரிகளாக மாற்ற முடியும். ஆனால், இந்திய ஓப்பனிங் அதைச் செய்யத் தவறிவிட்டது. குறிப்பாக, ஓப்பனிங் இணையை பலமுறை மாற்றிய பிறகும் அந்த இடைவெளியை நிரப்பவே முடியவில்லை.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்

அணியின் முக்கியமான பொறுப்புக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு, பலரது நம்பிக்கையைப் பெற்ற பிறகுதான் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்தார். ஆனால், ஒரு கம்பேக் கதக்களியைக் கொடுக்காமல், வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பிவிடுவது அவர்மீதான நம்பிக்கையை சீர்குலைத்து விடுகிறது. அணியில் தொடர்ந்து இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவாவது அவர் சிறப்பாக விளையாட வேண்டும். இல்லையென்றால், ரிஷப் பாண்ட் அந்த இடத்தைப் பிடித்துக் கொள்வார்.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

ஆல்ரவுண்டர்(!) பாண்டியா

டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிரடியாக விளையாடுகிறார் என்ற காரணத்திற்காக, டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விமர்சனங்களைச் சம்பாதித்தவர் பாண்டியா. எதிர்கொள்ளும்முதல் பந்திலேயே பவுண்டரியைப் பறக்கவிட்டாலும், நீண்ட ஃபார்மேட்டில் களத்தில் நீடிப்பதே முக்கியத்துவமானது. பந்துவீச்சிலும் பெரிதும் சோபிக்காமல் விட்டால் ஆல்ரவுண்டர் மீதான நம்பிக்கைக்கு மதிப்பில்லாமல் போய்விடும். அதனால், அந்நிய மண்ணில் அதிரடியாக விளையாட்டை வெளிப்படுத்தும் ஒரு ஆல்ரவுண்டரை இந்திய அணி கூடியவிரைவில் தயார் செய்ய வேண்டும்.

விராட் படும் பாடு

Virat

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இருந்த விமர்சனங்களை தலைகீழாக மாற்றியவர் விராட் கோலி. அதனால்தான், இப்போதைய நிலையில், அணியின் மொத்த சுமையும் அவர் பக்கம் திரும்பிவிட்டதோ என்னமோ. முதல் டெஸ்ட் போட்டியில் தனியாளாக விளையாடிக் கொண்டிருந்த அவருக்கு, நிலையான இணை கிடைத்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கலாம். முக்கியமாக இங்கிலாந்து பயிற்சியாளர் சொன்னதுபோல், விராட்டிற்கு மறைமுகமான நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அதை மாற்ற சகவீரர்கள் விராட்டிற்கு உதவி செய்ய மனமிறங்க வேண்டுமே.

virat kohli sports England Cricket indian cricket
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe