REVATHY

Advertisment

2020ஆம் ஆண்டு நடைபெறவிருந்தஒலிம்பிக் போட்டிகள், கரோனாகாரணமாக தள்ளிவைக்கப்பட்டு, இம்மாதம் 23ஆம் தேதி ஜப்பானின் டோக்கியோவில் தொடங்கவுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கஇதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் தகுதிபெற்றுள்ளனர். இதில் வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி,துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாளறிவன் உள்ளிட்ட 8 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இந்தநிலையில்தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தமேலும் நான்கு பேர் தேர்வாகியுள்ளனர். ரேவதி,தனலட்சுமி, சுபா ஆகியோர் கலப்பு 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்துக்கும், நாகநாதன் பாண்டி 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்துக்கும் தேர்வாகியுள்ளனர்.

ஏற்கனவே தடகளப் பிரிவில்ஆரோக்கிய ராஜீவ் என்ற தமிழ்நாடு வீரர் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.