இந்த ஆண்டுக்கான ஃபார்முலா 4 கார் பந்தயம் இந்தியாவில் 5 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் 2வது சுற்று போட்டி நேற்று (31-08-24) சென்னை தீவுத்திடலில் தொடங்கியது. அதன்படி, ஃபார்முலா 4 கார் பந்தய பயிற்சி போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, தகுதி சுற்றுக்கான போட்டி இன்று நடைபெற்றது. இந்த பந்தயத்தை காண ஏராளமான ரசிகர்களும், பிரபலங்களும் வந்தனர். சென்னையில் நடைபெற்ற கார் பந்தயம் நிறைவடைந்துள்ளது.
இந்த பந்தயத்தில், ஹைதராபாத் அணியைச் சேர்ந்த அலிபாய் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை அகமதாபாத் அணியைச் சேர்ந்த திவி நந்தன் மற்றும்மூன்றாவது இடத்தை பெங்களூர் அணியைச் சேர்ந்த ஜேடன் பாரியாட் ஆகியோர்பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.