Advertisment

பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி தேர்வு?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் வினோத் ராய் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை நிர்வகித்து வருகிறது. முறைப்படி பிசிசிஐ தலைவர் மற்றும் பிற நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் லோதா கமிஷன் பரிந்துரைப்படி வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் கடை நாள் இன்றுடன் முடிவடைய உள்ளது. ஆனால் தேர்தல் நடைபெறாமலேயே பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

மேலும் பிசிசிஐ செயலாளராக உள்துறை அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய் ஷாவும், அருண் துமால் புதிய பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

cricket
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe