Advertisment

மருத்துவமனையில் முத்தையா முரளிதரன் அனுமதி!

former cricket player Muttiah Muralitharan admitted at hospital in chennai

Advertisment

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழல்பந்து வீச்சு ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன் சென்னையில் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் முத்தையா முரளிதரன் ஐ.பி.எல். போட்டிகளுக்காக சென்னையில் இருந்துள்ளார். நேற்றிரவு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. மேலும், அவர் நேற்று (17/04/2021) தனது 48- வது பிறந்த நாளை கொண்டாடினார், இந்நிலையில் அவர் திடீரென மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களையும், கிரிக்கெட் உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலேயே அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை முத்தையா முரளிதரன் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

sunrisers hydrabad team Chennai Apollo Hospital Muttiah Muralitharan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe