Advertisment

கால்பந்து ஜாம்பவான் பீலே மரணம்

Football legend Pele passed away

82 வயதான பிரேசிலிய கால்பந்து ஜாம்பவான் பீலேவின் பெருங்குடலில் புற்று நோய்க்கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இந்த கட்டி கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அகற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பீலே அவ்வப்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.

Advertisment

இந்நிலையில் பீலேவின் உடல் திடீரென மோசமடைந்தது. இதன் பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பிலும் இருந்து வந்தார். இந்நிலையில் சிகிச்சையில் இருந்த பீலேவின் இதயம் மற்றும் சிறுநீரகம் தீவிரமாக பாதிக்கப்பட்டு இருந்தது.

Advertisment

தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பீலே சிகிச்சை பலனளிக்காமல் தனது 82 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். பீலே மரணமடைந்ததை அவரது மகள் இன்ஸ்டாகிராம் மூலம் உறுதிபடுத்தியுள்ளார்.

pele
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe