Advertisment

140 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை மாற்றப்போகும் ஆஷஸ் தொடர்...

இன்றைய நவீன ஒருநாள் போட்டி, டி20 கிரிக்கெட் போட்டிகளின் முன்னோடியான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்பட்டு 140 ஆண்டுகள் ஆகின்றன.

Advertisment

for the first time players name to be printed in test cricket jersy

தொடங்கியது முதல் இன்று வரை வீரர்களுக்கான ஜெர்சிகளில் எந்தவிதமான பெரிய மாற்றங்களும் செய்யப்படவில்லை. போட்டி விதிகள் மாறியபோதிலும், வெள்ளை உடைகள் மட்டுமே பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றன. ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகள் போல ஜெர்சியின் பின்புறம் பெயர்கள் அச்சிடப்படாமல், முழு வெள்ளை உடையுடனேடெஸ்ட் போட்டிகள் விளையாடப்படுகின்றனர். ஆனால் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்க உள்ள ஆஷஸ் தொடர் மூலம் டெஸ்ட் போட்டிகளின் 140 ஆண்டுகால வரலாறு மாற்றப்பட உள்ளது.

Advertisment

முதன்முறையாக இந்த தொடரில் வீரர்களின் ஜெர்சியின் பின்புறம் அவர்களின் பெயர் மற்றும் ஜெர்சி எண் குறிப்பிடப்பட உள்ளது. இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் மூலம்தெரிவித்துள்ளது. ஏற்கனவே இதுகுறித்த தகவல் இந்த ஆரம்பத்தில் பரவிய நிலையில் தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

Test cricket England Australia ashes
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe