Advertisment

முதன்முறையாக இடம் பிடித்த தமிழ்நாட்டு வீரர்; வெவ்வேறு கேப்டன்கள் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

First Tamil Nadu player to place; Indian team announcement with different captains!

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு மூன்று டி20 போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த மூன்று போட்டிகளுக்குமான அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா மறுபடியும் டி20 அணிக்கு கேப்டனாக செயல்படுவாரா என்று குழப்பம் நீடித்து வந்த நிலையில், சூரியகுமார் யாதவே மீண்டும் டி20 அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

ரோகித் சர்மாவும், விராட் கோலியும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறிது ஓய்வு தேவைப்படுவதாக தெரிவித்ததால் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பும்ராவுக்கும் டி20 போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்த தென்னாப்பிரிக்கா தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சன், ரஜத் பட்டிதர் மீண்டும் ஒரு நாள் அணிக்கு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த சாய் சுதர்ஷன் முதன்முறையாக இந்திய ஒரு நாள் அணியில் இடம் பிடித்துள்ளார். முகமது ஷமி காயத்தைப் பொறுத்து இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்திய டி20 அணி:

ஜெய்ஸ்வால், கில், ருத்ராஜ், திலக் வர்மா, சூரியகுமார்(C) ரிங்கு சிங், ஸ்ரேயாஸ், இஷான் கிஷன்(WK), ஜித்தேஷ் சர்மா (WK), ரவீந்திர ஜடேஜா(VC), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஸ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார், தீபக் சகர்.

இந்திய ஒரு நாள் அணி:

ருதுராஜ், சாய் சுதர்ஷன், திலக் வர்மா, ரஜத் பட்டிதர், ரிங்கு சிங், ஸ்ரேயாஸ், கே எல் ராகுல்(C), சஞ்சு சாம்சன்(WK), அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சகல், முகேஷ் குமார், ஆவேஸ் கான், அர்ஸ்தீப் சிங், தீபக் சகர்

இந்திய டெஸ்ட் அணி:

ரோகித் (C) கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ், ருதுராஜ், இஷான் கிஷன்(WK) கே எல் ராகுல்(WK) ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, சர்துல் தாகூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா (VC) பிரசித் கிருஷ்ணா

இதில் இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ், ஸ்ரேயாஸ் மூன்று விதமான அணியிலும் இடம் பிடித்துள்ளனர். மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் டி20 மற்றும் டெஸ்ட் அணிகளில் இடம் பிடித்துள்ளார். பந்துவீச்சாளர்களில் முகேஷ் குமார் மூன்று விதமான அணிகளிலும் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- வெ.அருண்குமார்

sports cricket
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe