முதல் ஒரு நாள் போட்டி; இந்திய அணி அபார வெற்றி 

First ODI Indian team is a big winner

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று மொகாலியில் தொடங்கியது. இந்திய அணியைப் பொறுத்தவரை கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முன்னணி வீரர்களுக்கு முதல் இரு போட்டிகளுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், முதல் இரு ஆட்டங்களை கே.எல். ராகுல் இந்திய அணியைத் தலைமை ஏற்று நடத்துகிறார்.

இந்த முதல் நாள் தொடரில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து களம் இறங்கியது. 35 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டை இழந்து 166 எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நின்றது. இதனையடுத்து, மைதானத்தில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 276 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் பந்து வீசிய முகமது சமி 5 விக்கெட்களையும், பும்ரா, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

அதன் பின்னர் 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் இந்திய அணி களம் இறங்கியது. இதில் இந்திய அணியைச் சேர்ந்த ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இந்திய அணிக்காக முதலில் பேட்டிங் செய்தனர். அதன்படி இந்திய அணி 48.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்து இந்தியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 74 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 71 ரன்களும், கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 58 ரன்களும், சூரியகுமார் யாதவ் 50 ரன்களும் குவித்தனர். இதன் மூலம் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 3 ஒரு நாள் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

Australia cricket India
இதையும் படியுங்கள்
Subscribe