Skip to main content

முதல் போட்டியே சென்னை-மும்பை பலப்பரிட்சை... ஐ.பி.எல் தொடர் அட்டவணை வெளியீடு!!  

Published on 06/09/2020 | Edited on 06/09/2020
 The first match is the Chennai-Mumbai multi-examination ... IPL match schedule released !!

 

13-வது ஐ.பி.எல் தொடரானது வரும் 19-ம் தேதி அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. கரோனா தொற்று காரணமாக உலகின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் ஐ.பி.எல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது, இந்தாண்டு ஐ.பி.எல் தொடரை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்று பிசிசிஐ முழுமுனைப்போடு இருந்தது. அதன்படி அறிவிப்புகள் வெளியாகி அனைத்து ஏற்பாடுகளும் வேகமாக நடந்து வருகின்ற  நிலையில் அமீரகத்தில் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடருக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

துபாயில் நடக்கும் ஐ.பி.எல் தொடரில் சென்னை மும்பை டெல்லி உட்பட 8 அணிகள் விளையாடுகின்றன. கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் தொடரில் விளையாட உள்ளன. 19-ஆம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில்  சென்னை அணி மும்பை அணியை எதிர்த்து விளையாடுகிறது. செப்டம்பர் 22-ஆம் தேதி ராஜஸ்தான் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாட இருக்கிறது. செப்டம்பர் 25 ஆம் தேதி சென்னை அணி, டெல்லி அணியை எதிர்த்து விளையாடுகிறது.  செப்டம்பர் 26 ஆம் தேதி கொல்கத்தா ஹைதராபாத் அணி பலப்பரீட்சை, செப்டம்பர் 27 ஆம் தேதி  ராஜஸ்தான் மும்பை இடையே போட்டி. செப்டம்பர்  28ல் பெங்களூரு மும்பை அணிகள் பலப்பரீட்சை, செப்டம்பர் 29ல் டெல்லியை எதிர்கொள்கிறது ஐதராபாத். அக்டோபர் 2 ஆம் தேதி துபாயில் நடைபெறும் போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்கிறது ஹைதராபாத். அக்டோபர் 3 பெங்களூர் ராஜஸ்தான் அணிகள் மோதல்,  இரவு போட்டியில் டெல்லி கொல்கத்தா பலப்பரீட்சை. அக்டோபர் 4 மும்பை ஐதராபாத் அணிகள் இடையே மோதல். இரவு போட்டியில் சென்னை யை எதிர்கொள்கிறது பஞ்சாப்.

 

 

Next Story

தமன்னாவிற்கு சைபர் கிரைம் சம்மன்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
tamanna summoned by maharashtra cyber crime for ipl telecast issue

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.  

கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தமன்னாவிற்கு வருகிற 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

Next Story

சென்னைக்கு மீண்டும் தோல்வி; தனி ஒருவனாக வெற்றியைத் தேடித்தந்த ஸ்டாய்னிஸ்!

Published on 23/04/2024 | Edited on 24/04/2024
Chennai super kings again lost to Lucknow team

ஐபிஎல் 2024இன் 39 ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ரகானேவும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரகானே 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து வந்த டாரியல் மிட்செல் 11 ரன்களும் ஜடேஜா 17 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை சென்னை அணியினர் எடுத்தனர்.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டி காக்கும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். 3 பந்துகளில் ரன் எடுக்காமல் குவிண்டன் டி காக் ஆட்டம் இழக்க, அவரைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் மறுமுனையில் 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த படிக்கல் 19 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நின்று அபாரமாக, ஆடி 63 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஸ்டாய்னிஸ் லக்னோ அணியை வெற்றி பெறச் செய்தார். லக்னோ அணி இறுதியாக 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெற்றியைத் தனதாக்கிக்கொண்டனர். கடந்த போட்டியிலும் லக்னோ அணி சென்னை அணியை தோற்கடித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் சென்னை அணியை லக்னோ அணி தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.