Advertisment

முதல் போட்டியே சென்னையில்... வெளியானது ஐ.பி.எல் துவங்கும் தேதி!

First match in Chennai ... IPL matches date announced!

இந்தியாவில்ஐ.பி.எல் கிரிக்கெட்திருவிழா ஆண்டுதோறும்நடைபெற்று வருகிறது. கரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு, ஐக்கிய அரபுஅமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடந்த ஐபிஎல் போட்டிகளை, இந்த ஆண்டு வழக்கம்போல் இந்தியாவில்,ஏப்ரல் - மே மாதத்தில்நடத்தஇந்தியகிரிக்கெட்வாரியம் முயற்சி செய்து வந்த நிலையில், ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் ஐ.பி.எல் 2021போட்டிகள் துவங்கும்என்ற அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.

Advertisment

அடுத்த மாதம் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் சென்னையில் 14-வதுஐ.பி.எல் போட்டிகள் துவங்கும். ஏப்ரல் 9-ஆம்தேதி தொடங்கும் முதல் ஐ. பி.எல் போட்டியில் சென்னை மைதானத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் களம் காண்கின்றன. மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ஆகிய 6 மைதானங்களில் ஐ.பி.எல் போட்டிகள் நடக்கும். சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூருவில் தலா 10 போட்டிகள் நடைபெறும். ஐ.பி.எல் தொடரில் உள்ள எந்த அணிக்கும் இம்முறை சொந்த மைதானத்தில் போட்டிகள் நடைபெறாது. தொடரின் முதற்கட்ட போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. பிற்பகுதியில் சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ சார்பில்அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment

cricket IPL sports
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe