puj

அடிலெய்டில் நடந்து வரும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வீரர்கள் ரன் சேர்க்க திணறினர். அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆனா நிலையில் புஜாரா நிலைத்து நின்று ஆடி தனது சதத்தை பூர்த்தி செய்தார். 246 பந்துகளில் 123 ரன்கள் எடுத்து புஜாரா ஆட்டமிழந்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்துள்ளது.

Advertisment