Advertisment

கடைசி டெஸ்ட் போட்டி! - பதிலடி கொடுக்குமா இந்திய அணி?

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்று களமிறங்கவுள்ளது.

Advertisment

India

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

கடந்த இரண்டு மாதங்களாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுடன் பல்வேறு ஃபார்மேட்டுகளில் விளையாடி வருகிறது. அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வென்றிருந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக சவாலான ஆட்டங்களை எதிர்கொண்டு வந்தது. இங்கிலாந்துக்கு எதிராக டி20 தொடரில் வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரில் தோற்றது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணியின் கையே ஓங்கியிருந்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றிருந்தாலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியைத் தவிர்த்து மற்ற இரு போட்டிகளில் போராடித் தோற்றது. இதன்மூலம், 3 - 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

இந்நிலையில், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. தொடரை வெல்ல முடியவில்லை என்றாலும், இந்திய அணியும் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. எனவே, கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பேசியுள்ள அஜின்கியா ரகானே, “கடைசி போட்டி மிகவும் முக்கியமானது. இங்கிலாந்து வீரர்கள் மிகச்சிறப்பாக விளையாடினார்கள். இந்திய அணியின் சார்பில் நெருக்கை கொடுத்தோம். கடைசி போட்டியில் நிச்சயம் வெற்றிபெறுவோம்” என தெரிவித்துள்ளார்.

sports England Cricket indian cricket
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe