ScZS

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணியும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸி. அணியும் வென்று 1-1 என்று சமநிலையில் உள்ளன. இதனையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இதற்கான இந்தியா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பிய ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதற்கு பதில் மயங்க் அகர்வால், ரவிந்திரஜடேஜா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் ஆஸ்திரேலியா அணியை பொருத்தவரைஹண்ட்ஸ்கோம்ப் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் மிட்ஷெல் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisment