இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி!

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடைபெறுகிறது.
Advertisment

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகின்றன. ஏற்கனவே நடைபெற்றுள்ள நான்கு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. பெங்களூருவில் வைத்து நடைபெற்ற நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. முதல் மூன்று ஆட்டங்களின் சுமாரான ஆட்டத்தில் இருந்து, நான்காவது ஆட்டம் ஆஸ்திரேலிய அணியின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தியது.
Advertisment

இந்நிலையில், நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் ஐந்தாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்த ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்கும். ஏற்கனவே தொடரைப் பறிகொடுத்திருந்தாலும், நான்காவது ஆட்டத்தில் குறைகளைத் திருத்திக்கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியும், முந்தைய ஆட்டத்தின் தோல்வியிலிருந்து மீண்டுவர போராடும் இந்திய அணியும் என இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.