உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் உடல் டெல்லியில் உள்ள நிகம்போத் மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/arunnaa.jpg)
கிரிக்கெட் மீது தனிஆர்வம் கொண்டிருந்த அருண் ஜேட்லிக்கு மரியாதையை செலுத்தும் விதமாக டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்திற்கு அருண் ஜேட்லியின் பெயரை வைப்பது என டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இனி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானம் அருண் ஜேட்லி பெயராலேயே அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us