Skip to main content

“விடைபெறுகிறேன்...” - ஓய்வை அறிவித்தார் ரவீந்திர ஜடேஜா!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
“Farewell...” - Ravindra Jadeja Announces Retirement!

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி நேற்று (29.06.2024) நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா-  இந்தியா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 176 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்களையும், அக்சர் படேல் 47 ரன்களும், ஷிவம் துபே 27 ரன்களும் அடித்தனர். அதன் பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. இந்திய அணியில் ஹர்திக் மூன்று விக்கெட்டுகளையும், பும்பரா, ஹர்ஷித் சிங் தலா இரண்டு விக்கெட்டுகளையும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். அதேநேரம் சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தனர். விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றதையடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவீந்திர ஜடேஜா அறிவித்துள்ளார். முன்னதாக ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர். இத்தகைய சூழலில் தான் ரவீந்திர ஜடேஜாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக ரவீந்திர ஜடேஜா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நன்றி நிரம்பிய இதயத்துடன் டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். டி20 உலகக் கோப்பையை வெல்வது என்ற கனவு நனவானது. இது எனது சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சம்” எனவும் குறிப்பிட்டுள்ளார். 

 

Next Story

IND vs ZIM : டி20 தொடரை வென்று இந்தியா அசத்தல்!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
IND vs ZIM India won the T20 series and won it

கேப்டன் சுப்மன் கில் தமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதனையொட்டி இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 6 ஆம் தேதி (06.07.2024) நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனையடுத்து 7 ஆம் தேதி (07.07.2024) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என இந்தியா அணி சமன் செய்திருந்தது.

அதனைத் தொடர்ந்து இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி கடந்த 10 ஆம் தேதி (10.07.2024) நடைபெற்றது. இதில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது. அதே சமயம் இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 150 வெற்றிகளை ஈட்டிய முதல் அணி என்ற சிறப்பையும் இந்தியா பெற்றது. 

IND vs ZIM India won the T20 series and won it

இத்தகைய சூழலில் தான் இந்தத் தொடரின் 4வது போட்டி இன்று (13.07.2024) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஜிம்பாப்பே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 152 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு ஜிம்பாப்வே அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்நிலையில் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் களமிறங்கினர். இவர்கள் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

அந்த வகையில் இறுதி வரை விக்கெட்டையே பறிகொடுக்காமல் ஜெய்ஸ்வால் 93 ரன்களும், சுப்மன் கில் 58 ரன்களும் எடுத்து அசத்தினர். இறுதியாக 15.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஜிம்பாப்வே அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 - 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் துஷார் தேஷ்பாண்டே அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. 

Next Story

IND vs ZIM : இந்திய அணிக்கு 153 ரன்கள் இலக்கு!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
IND vs ZIM : 153 runs target for Indian team

கேப்டன் சுப்மன் கில் தமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதனையொட்டி இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 6 ஆம் தேதி (06.07.2024) நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனையடுத்து 7 ஆம் தேதி (07.07.2024) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என இந்தியா அணி சமன் செய்திருந்தது.

அதனைத் தொடர்ந்து இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி கடந்த 10 ஆம் தேதி (10.07.2024) நடைபெற்றது இதில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அதே சமயம் இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 150 வெற்றிகளை ஈட்டிய முதல் அணி என்ற சிறப்பையும் இந்தியா பெற்றது.

இந்நிலையில் இந்தத் தொடரின் 4வது போட்டி இன்று (13.07.2024) நடைபெற்று வருகிறது. அதன்படி இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஜிம்பாப்பே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 152 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு ஜிம்பாப்வே அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 4 வது டி20 போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் துஷார் தேஷ்பாண்டே அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.