உலகின் சிறந்த பவுலர் என பெரிய கிரிக்கெட் ஜாம்பவான்களே ஒப்புக்கொண்ட பும்ராவை பேபி பவுலர் எனக் கூறி அப்துல் ரசாக் ரசிகளின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். கிரிக்கெட் பாகிஸ்தான் என்ற இணையதளத்திற்கு பேட்டியளித்த அப்துல் ரசாக், தான் கிளென் மெக்ரா, வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான்களை எதிர்கொண்டிருப்பதாகவும், தனக்கு பும்ரா ஒரு பேபி பவுலர் எனவும், தான் பேட்டிங் செய்தால் பும்ரா பந்துவீச்சை ஆதிக்கம் செலுத்தி அடித்து ஆடியிருப்பேன் எனவும் கூறியுள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதையடுத்து ரசிகர்கள் சிலர் அவர் உலகக் கோப்பையில் முக்கியமான கட்டத்தில் முனாப் படேலிடம் ஆட்டமிழந்ததை சுட்டிக்காட்டி கேலி செய்து வருகின்றனர். ட்விட்டரில் ரசிகர் ஒருவர், கிரிக்கெட்டில் தான் உங்களால் விருது எதையும் பெற முடியவில்லை. அதனால் இந்த ஆண்டின் சிறந்த ஜோக் விருதைப் பெற விரும்புகிறீர்களா? எனக் கிண்டல் செய்துள்ளார்.