Advertisment

ஓய்வை அறிவித்தார் ஃபாப் டூப்ளஸிஸ்!

FAF DUPLESSIS

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின்முக்கியவீரர்களில் ஒருவரும், அந்த அணியின் முன்னாள் கேப்டனுமான ஃபாப்டூப்ளஸிஸ்,டெஸ்ட்கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதானஅவர், இதுவரை 69 டெஸ்ட்போட்டிகளில் விளையாடியுள்ளார். 40.02 சராசரியுடன் 4,163 ரன்கள்குவித்துள்ளார். மேலும் 10 சதங்களையும், 21 அரைசதங்களையும் விளாசியுள்ளார். 20 ஓவர் உலகக்கோப்பையில் கவனம்செலுத்துவதற்காக, அவர் டெஸ்ட்போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் முடிவை எடுத்துள்ளார்.

Advertisment

தனதுஓய்வு முடிவு குறித்து ஃபாப்டூப்ளஸிஸ்,"என் இதயம் தெளிவாக உள்ளது, புதிய அத்தியாயத்திற்குள் செல்லஇது சரியானநேரம். விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் எனது நாட்டிற்காக விளையாடியது கௌரவமான ஒன்று. ஆனால் நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதற்கான நேரம் வந்துவிட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பு யாராவது என்னிடம், நான் தென்னாப்பிரிக்காவுக்காக 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன், அணியின் கேப்டனாக இருப்பேன்எனக் கூறியிருந்தால் நான் அவர்களை நம்பியிருக்க மாட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

அடுத்த ஆண்டு நடைபெறும்20 ஓவர்உலகக்கோப்பைக்குப் பிறகு ஃபாப்டூப்ளஸிஸ் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலிருந்தும் விடைபெறுவார்எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Test cricket South Africa
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe