Advertisment

தோனியின் சாதனையை முறியடித்தார் இயான் மோர்கன்...!

morgan

Advertisment

அயர்லாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது ஒரு நாள் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. முடிவில் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.

பரபரப்பான மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் 84 பந்துகளில் அதிரடியாக நான்கு சிக்ஸர்கள்உட்பட 106 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் கேப்டனாக அதிக சிக்ஸர் அடித்த நபர் என்ற சாதனையையும் தன்வசமாக்கி கொண்டார். இதற்கு முன்பு211 சிக்ஸர்களுடன் தோனி முதல் இடத்தில் இருந்தார். தற்போது அவரது சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

தோனி 332 போட்டிகளில் செய்த சாதனையை இயான் மோர்கன் தன்னுடைய 163வது போட்டியிலேயே முறியடித்துள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

cricket
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe