england

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-ஆவது ஐ.பி.எல் தொடரின் வெளியேற்றுதல் சுற்று நேற்று நடைபெற்றது. பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்திய இப்போட்டியில், பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன்மூலம், இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்த பெங்களூரு அணி ஏமாற்றத்துடன் வெளியேறியுள்ளது.

Advertisment

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி வீரரான அலெக்ஸாண்ட்ரா ஹார்ட்லி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், "நாம் எப்போதாவது கோப்பையை வெல்வோமா?" என பெங்களூரு அணியின் தோல்வி குறித்துப் பதிவிட்டுள்ளார். அதற்கு, இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் சக வீரரான கேட் கிராஸ் அளித்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

அலெக்ஸாண்ட்ரா ஹார்ட்லி கேள்விக்குப் பதிலளித்த கேட் கிராஸ், ஓய்வு குறித்துக் கேட்ட போது தோனி கூறிய 'நிச்சயமாக இல்லை(definitely not) என்ற வாக்கியத்தைப் பதிவிட்டுள்ளார்.