Advertisment

உலக சாம்பியன் இங்கிலாந்துக்கு ஏற்பட்ட பரிதாப நிலை... மீம் போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்...

இங்கிலாந்து, அயர்லாந்து அணிகள் மோதும் 4 நாள் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.

Advertisment

england vs ireland test match scorecard

ஆட்டத்தின் முதல் நாளான இன்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை எடுப்போம் என்று டாஸின் போது கூறினார். ஆனால் ஆட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் இங்கிலாந்து அணியின்விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. இங்கிலாந்து அணி வீரர்களில் ஜோ டென்லி மட்டும் அதிகபட்சமாக 23 ரன்கள் அடித்தார். மற்ற வீரார்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினார்.

Advertisment

இந்நிலையில் இங்கிலாந்து அணி 85 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.அயர்லாந்து அணியின் டிம் முர்தாக் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் அயர்லாந்து வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வென்றதற்கு பிறகு நடக்கும் இந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இவ்வளவு மோசமாக விளையாடி வருவதை கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கிண்டல் அடித்து வருகின்றனர்.

England icc worldcup 2019 ireland
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe