Advertisment

டி20 தொடரை வென்றது இந்திய அணி!

england vs india t20 series india team has been win the cup

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு 224 ரன்களைக் குவித்தது. அதைத் தொடர்ந்து, 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இங்கிலாந்து அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 3-2 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

Advertisment

england vs india t20 series india team has been win the cup

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 80 ரன்களும், ரோஹித் சர்மா 64 ரன்களும், ஹர்திக் பாண்டியா 39 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும் எடுத்தனர். அதேபோல் ஷர்துல்- 3, புவனேஷ்வர் குமார்- 2, நடராஜன், ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Advertisment

இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டேவிட் மாலன் 68 ரன்களும், ஜோஸ் பட்லர் 52 ரன்களும் எடுத்தனர்.

india team win INDIA VS ENGLAND t20 series
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe