/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/india444.jpg)
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்குஎதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது. தனது இரண்டாவது இன்னிங்ஸில் 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் குவிந்த இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்சில் 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. மொத்தம் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் நான்கு விக்கெட்டுகளையும், பும்ரா 3, இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)