Advertisment

17 சிக்ஸர்கள், 200+ ஸ்ட்ரைக் ரேட்... ஆப்கானிஸ்தானை அடித்து நொறுக்கிய தனிஒருவன்...

இங்கிலாந்தில் நடந்துவரும் உலகக்கோப்பையில் நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மோதின.

Advertisment

england versus afganistan match summary

இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி மைதானத்தின் நான்கு புரங்களும் சிக்ஸர் மழையாக பொழியவிட்டது. அந்த அணியின் ரூட்(88 ரன்கள்), பெர்ஸ்டோவ்(90 ரன்கள்) அதிரடியாக ஆடினாலும் நேற்றைய போட்டியில் எதிரணிக்கு சிம்மசொப்பனமாக இருந்தது இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தான்.

Advertisment

71 பந்துகளில் 148 ரன்களை விளாசினார். மோர்கன் 28 ரன்கள் சேர்த்திருந்தபோது அவரதுகேட்சை கோட்டை விட்டனர் ஆப்கானிஸ்தான் வீரர்கள். அதன் பிறகு அதிரடி காட்ட ஆரம்பித்தவர் ஆப்கான் பந்துவீச்சை சிதறடித்து விட்டார். கேட்சை மிஸ் செய்த அடுத்த 45 பந்துகளில் 120 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக ஆடிய மோர்கன் 36 பந்துகளில் அரைசதத்தையும் அடுத்த 21 பந்துகளில் சதத்தையும் கடந்தார்.

ஆப்கானிஸ்தானின் நட்சத்திர பந்துவீச்சாளரான ரஷித் கான் நிலைமை நேற்று பரிதாபமானது. 9 ஓவர்கள் வீசிய ரஷித்கான் 110 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 397 ரன்கள் எடுத்து. இதனையடுத்து ஆடிய ஆப்கான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்து 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Afganishtan England icc worldcup 2019
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe