Advertisment

20 ஓவர் உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணி: ஜோ ரூட், ஸ்டோக்ஸ்க்கு இடமில்லை!

england team

இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திலும், ஓமன் நாட்டிலும்அக்டோபர் 17 முதல் நவம்பர் 14ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்த உலகக்கோப்பைக்கான இந்திய அணி நேற்று (08.09.2021) அறிவிக்கப்பட்டது.

Advertisment

இந்தநிலையில்இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், 20 ஓவர் உலகக்கோப்பைக்கானதங்களது அணியை இன்று அறிவித்துள்ளது. இந்த அணியில் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரானபென் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை.பென் ஸ்டோக்ஸ் தற்போது தனது கை விரல் காயம் காரணமாகவும், மனநலத்திற்காகவும் கிரிக்கெட்டிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கியுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

அதேநேரத்தில்அக்டோபர் 10ஆம் தேதி வரை அணியில் மாற்றம் செய்யலாம் என்பதால், பென் ஸ்டோக்ஸை அணியில் சேர்ப்பது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பின்னர் முடிவு செய்யவுள்ளது. அதேபோல் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனும், டெஸ்ட் அணி கேப்டனுமான ஜோ ரூட் இருபது ஓவர் அணியில் இடம்பெறவில்லை.

இருபது ஓவர் உலகக்கோப்பைக்கானஇங்கிலாந்து அணி வருமாறு:இயான் மோர்கன்,மொயீன் அலி, பரிஸ்டோ,சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான்,லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலன், டைமல் மில்ஸ், அடில் ரஷித், ஜேசன் ராய், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.

Joe root Ben stokes T20 WORLD CUP 2021 England Cricket
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe