Advertisment

"இங்கிலாந்து தொடருக்கு சச்சின் பெயரை வையுங்கள்!" - இங்கிலாந்து வீரர் கோரிக்கை!

tendulkar - cook

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், இந்தியவம்சாவளியைச் சேர்ந்த, இங்கிலாந்து நாட்டின்முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர், இங்கிலாந்து - இந்தியா தொடருக்கு 'டெண்டுல்கர் - குக் டிராஃபி' எனப் பெயரிட வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் தனதுட்விட்டர் பக்கத்தில், "இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடரை "டெண்டுல்கர்- குக் டிராஃபி" என்று அழைக்க வேண்டும், ஏனெனில் இருவரும் தங்கள் நாடுகளுக்கு அதிக டெஸ்ட் ரன்களைக் எடுத்துள்ளனர். பல போட்டிகளில் அவர்கள் ஒருவருக்கொருவர் எதிராகவிளையாடியுள்ளனர். மேலும், டெண்டுல்கர் ஒரு ஜாம்பவான் என்பதுநமக்குத் தெரியும். அவர் பெயரில் எந்த சீரிஸும் இல்லை"எனக் கூறியுள்ளார்.

Advertisment

மேலும், மான்டி பனேசர் தனதுட்விட்டர் பக்கத்தில், இந்தியா- இங்கிலாந்து இடையேயான தொடருக்கு யார் பெயரைவைக்கலாம்என, ஒரு வாக்கெடுப்பையும் நடத்தியுள்ளார். அதில் அதிகமானோர் 'டெண்டுல்கர் - குக்டிராஃபி'என்பதையே தேர்வு செய்துள்ளனர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட்தொடர், 'பார்டர்- கவாஸ்கர் ட்ராஃபி' எனஅழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Alastair cook INDIA VS ENGLAND Sachin Tendulkar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe