Skip to main content

சென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது -  இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்!

Published on 23/02/2021 | Edited on 25/02/2021

 

stuart broad

 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்ற நிலையில், மூன்றாவது போட்டி நாளை (24.02.2021) தொடங்கவுள்ளது. முதல் இரண்டு ஆட்டங்கள் சென்னையில் நடைபெற்ற நிலையில், மூன்றாவது டெஸ்ட் பகலிரவு போட்டியாக, உலகின் மிகப்பெரிய மைதானமான மோட்டேரா மைதானத்தில் நடக்கவுள்ளது. இப்போட்டி குறித்து, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்து ஊடகம் ஒன்றில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

 

ஸ்டூவர்ட் பிராட் அக்கட்டுரையில், உலகத்தின் மிகப்பெரிய மைதானத்தில் விளையாட இருப்பது குறித்தும், நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்த தனது அனுபவம் குறித்தும் கூறியுள்ளார்.

 

இதுகுறித்து ஸ்டூவர்ட் பிராட், "உலகிலேயே பெரியதான, மோட்டேராவில் இருக்கும், இந்த புதிய மைதானம், மிகவும் பிடித்த வகையில் உள்ளது என்றுதான் கூற வேண்டும். அது காலியாக இருக்கும்போது கூட அதைச்சுற்றி ஒரு ஒளி வீசுகிறது. புதன்கிழமை 50 சதவீத பார்வையாளர்களுடன், 55,000 மக்களுடன், இந்த மைதானம் எப்படி இருக்கும் என்பதை என்னால் கற்பனை மட்டுமே செய்ய முடியும். மேலும், ஒரு உதாரணத்திற்கு, இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேரோடு ஒரு உலகக் கோப்பை போட்டி இங்கு நடந்தால், நாங்கள் நினைப்பதைக் கூட எங்களால் கேட்க முடியுமா என தெரியவில்லை.

 

2017-18 ஆஷஸ் தொடரில், மெல்போர்ன் கிரிக்கெட் கிரவுண்டில் டேவிட் வார்னர் 99 ரன்கள் எடுத்திருந்தபோது, அவரின் கேட்சை நான் பிடித்தேன். பிறகுதான் டாம் கரன் நோ-பால் வீசியது தெரிந்தது. அதற்கடுத்த பந்தில் அவர் சதத்தை எட்டியபோது, அங்கு எழுந்த சத்தம் நம்ப முடியாத வகையில் இருந்தது. ஆனால் இந்த மைதானம் அந்தச் சத்தத்தை விஞ்சும் திறனைக் கொண்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். பார்வையாளரின்றி நடைபெற்ற முதல் போட்டியுடன் ஒப்பிடும்போது, கடந்த வாரம் (இரண்டாவது டெஸ்டின் போது) தினசரி 10,000 பேர் கூட ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தினர். இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது தற்செயலானது என நினைக்கவில்லை" எனக் கூறியுள்ளார். 

 

 

Next Story

மீண்டும் நடைபெறும் ரத்தான ஐந்தாவது டெஸ்ட்; எங்கு? எப்போது?

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

INDIA VS ENGLAND

 

இந்தியா - இங்கிலாந்திற்கு இடையே கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில்  டெஸ்ட் தொடர் நடைபெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகித்து வந்த நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.  அதனைத்தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருணுக்கும், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதருக்கும் கரோனா உறுதியானது.

 

இதனையடுத்து கரோனா காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ரத்தான ஐந்தாவது டெஸ்ட் போட்டியை நடத்த முயற்சி எடுத்தன.

 

இந்தநிலையில் ரத்தான ஐந்தாவது டெஸ்ட் போட்டி அடுத்தாண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை எட்க்பாஸ்டனில் நடைபெறவுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியை தொடர்ந்து மூன்று 20 ஓவர், மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

வீரர்களின் மரண பயம் - ஐந்தாவது டெஸ்ட் இரத்தானதற்கு காரணம் கூறிய கங்குலி!

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

dada

 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்த நிலையில், இந்திய அணியின் உதவியாளருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால், இரு அணிகளுக்கிடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இரத்தான போட்டியைத் திரும்ப நடத்த இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முயற்சி மேற்கொண்டுவருகின்றன.

 

இந்தநிலையில், ஐபிஎல் தொடரில் தாங்கள் பங்கேற்பது பாதிக்கப்படக்கூடாது என கருதியே ஐந்தாவது டெஸ்ட்டில் இந்திய வீரர்கள் விளையாட மறுத்துவிட்டதாக இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் உட்பட சிலர் குற்றஞ்சாட்டினார்.

 

இந்தநிலையில், தனியார் ஊடகம் ஒன்றிடம் பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, ஐந்தாவது டெஸ்ட் போட்டி இரத்து செய்யப்பட ஐபிஎல் காரணமல்ல என தெரிவித்துள்ளார்.

 

ஐந்தாவது டெஸ்ட் இரத்து செய்யப்பட ஐபிஎல் காரணமா என்ற கேள்விக்குப் பதிலளித்த கங்குலி கூறியதாவது; "இல்லை.. இல்லை. பிசிசிஐ ஒருபோதும் பொறுப்பற்ற வாரியமாக செயல்படாது. மற்ற வாரியங்களையும் நாங்கள் மதிக்கிறோம். வீரர்கள் விளையாட மறுத்தனர். ஆனால் அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. பிசியோ யோகேஷ் பர்மார் வீரர்களுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தார். நிதின் படேல் (கரோனாவால் பாதிக்கப்பட்ட பிசியோ) தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட பிறகு யோகேஷ் பர்மார் மட்டும்தான் வீரர்களுடன் பணியாற்றி வந்தார்.

 

யோகேஷ் பர்மார் வீரர்களுடன் நெருக்கமாக இருந்ததோடு, அவர்களுக்கு கரோனா பரிசோதனைகளைக் கூட மேற்கொண்டார். அவர் வீரர்களுக்கு மசாஜும் செய்துவந்தார். அவர் அவர்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தார். அவருக்கு கரோனா உறுதியானதை அறிந்ததும் வீரர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். தங்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும் என நினைத்து அவர்கள் பயந்தனர். மரண பயத்தை அடைந்துவிட்டனர். கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பது எளிதானதல்ல. நீங்கள் அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்.”

இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.