ADVERTISEMENT

மூன்றாவது நடுவரால் விரக்தியடைந்த இங்கிலாந்து!

10:26 AM Feb 25, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்ற நிலையில், மூன்றாவது போட்டி, பகலிரவு ஆட்டமாக நேற்று (24.02.2021) தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 112 ரன்களுக்கு சுருண்டது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 99 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. ரோகித் சர்மா 57 ரன்களோடு களத்தில் உள்ளார்.

இந்தநிலையில் இப்போட்டியில் மூன்றாவது நடுவரால், இங்கிலாந்து அணி அதிருப்தி அடைந்துள்ளது. நேற்று இந்தியா பேட்டிங் செய்கையில் சுப்மன் கில், பேட்டில் பட்ட பந்தை, ஸ்டோக்ஸ் தரையில் படும்படி பிடித்தார். இதனை ஆய்வு செய்த மூன்றாவது நடுவர், வழக்கத்திற்கு மாறாக விரைவில் முடிவை அறிவித்தார். அதேபோல் ரோகித்தை ஸ்டம்பிங் செய்யும் முயற்சியில் இங்கிலாந்து அணி ஈடுபட்டபோது, அதனை ஆய்வு செய்த மூன்றாவது நடுவர் வேறு வேறு கோணங்களைப் பார்க்காமல் முடிவை அறிவித்தார். இதனால் இங்கிலாந்து அணி அதிருப்தி அடைந்ததோடு, இதுபற்றி போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத்திடம் பேசியுள்ளனர். போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத்திடம் பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டும், அந்த அணியின் பயிற்சியளாரும், ‘நடுவரின் முடிவெடுக்கும் செயல்பாட்டில் நிலைத்தன்மை இருக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளனர்.

இதுகுறித்து இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலி, “நாங்கள் பேட் செய்தபோது, ஜாக் லீச் பேட்டில் பட்டுச் சென்ற பந்து கேட்ச்சாகவில்லை. அவர்கள் அதை ஐந்து அல்லது ஆறு வெவ்வேறு கோணங்களில் பார்த்தது போல் தோன்றியது. நாங்கள் ஃபீல்டிங் செய்யும்போது அவர்கள் ஒரு கோணத்தில் மட்டுமே பார்த்தார்கள். அதுதான் விரக்தியாக இருக்கிறது. அவர்கள் அவுட்டா இல்லையா என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் நான்கு அல்லது ஐந்து கோணங்களில் ஆய்வு செய்யப்படாததால்தான் விரக்தி என நினைக்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT