ENGLAND HEAD COACH

இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட்போட்டி, கடந்த 24 ஆம் தேதி தொடங்கி, இரண்டே நாட்களில் முடிவடைந்தது. பகலிரவுஆட்டமாகநடந்த இப்போட்டியில், சுழற்பந்து வீச்சுக்குமைதானம் நன்றாக ஒத்துழைத்ததால், இரு அணி வீரர்களுமேபேட்டிங் செய்ய சிரமப்பட்டனர். இந்திய வீரர்கள் ஓரளவிற்கு சமாளித்தாலும், அஸ்வின்- அக்ஸர் படேல்சுழற்பந்து வீச்சை சமாளிக்கமுடியாமல் இங்கிலாந்து அணி, இரண்டு இன்னிங்ஸ்களிலும் சுருண்டது. இந்தியா அபாரவெற்றி பெற்றது.

Advertisment

இந்தநிலையில் இந்த போட்டி நடைபெற்றமைதானத்தின் பிட்ச்சை, இங்கிலாந்து முன்னாள் வீரர்கள்பலர் விமர்சித்து வருகின்றனர். இங்கிலாந்து அணியின்கேப்டன்ஜோரூட்டும், பிட்ச்குறித்துவிமர்சனங்களை முன்வைத்தார். இந்தநிலையில், பிட்ச்குறித்துபுகாரளிக்க இங்கிலாந்து அணி ஆலோசித்து வருகிறது.

Advertisment

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர்,"நாங்கள் திரைக்குப் பின்னால் சில விஷயங்களைப் பற்றி பேசுவோம்" எனதெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் "மூன்று நாட்கள் கிரிக்கெட் எஞ்சியிருக்கும்போது நாங்கள் இங்கே அமர்ந்திருப்பதில் ஏமாற்றமடைகிறோம். ஒரு சில பார்வையாளர்களும் ஏமாற்றமடைந்திருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும்.நாங்கள் ஜவகல் ஸ்ரீநாத்துடன் பேசினோம், ஆனால் அது பிட்ச் பற்றி அல்ல. ஜோரூட்டும், நானும் உட்கார்ந்து, உரையாட வேண்டும். உரையாடல் எங்களைஎங்கே கொண்டுசெல்கிறது எனபார்க்கவேண்டும்" எனகூறியுள்ளார்.

மேலும் அவர், "இந்த பிட்ச்களில் நாங்கள் சிறந்து விளங்க வேண்டும், மேலும் நாங்கள் மேம்படுத்தக்கூடிய இடங்கள்கிடைத்தது. அதனை நாங்கள் ஏற்க வேண்டும். முதல் இன்னிங்சைப் பாருங்கள் [74 க்கு இரண்டு முதல் 112 ஆல் அவுட்டானது]. அதிக ரன்கள் எடுக்க எங்களுக்கு அங்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, அடுத்த முறை அதைத்செய்வோம். பிட்ச் என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும், இந்தியா இறுதியில் அந்த பிட்சில் எங்களை விட சிறப்பாக விளையாடியது" எனகூறியுள்ளார்.

Advertisment

இங்கிலாந்து அணி புகாரைஏற்று சர்வதேச கிரிக்கெட்வாரியம் நடவடிக்கை எடுத்தால், மைதானத்திற்கு மூன்று புள்ளிகள் குறைக்கப்படும். இந்தியஅணிக்கு எந்த புள்ளிகளும் குறைக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.