Advertisment

ஆடவர் கிரிக்கெட்டில் கூட யாரும் செய்யாத சாதனையை செய்து வரலாறு படைத்த ஆஸ்திரேலிய வீராங்கனை...

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையான எல்லிஸ் பெர்ரி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

Advertisment

ellyse perry becomes first cricketer to score 1000 runs and pick 100 wickets in t20 cricket

ஆஸ்திரேலிய அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான இவர் டி20 போட்டிகளில் ஆயிரம் ரன்கள் மற்றும் நூறு விக்கெட்டுகளை எடுத்த முதல் நபர் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ஆடவர் கிரிக்கெட்டில் கூட இதுவரை எந்த வீரரும் இப்படி ஒரு சாதனையை படைத்ததில்லை.

ஆடவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகபட்சமாக பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி, டி20 போட்டிகளில்,1498 ரன்களையும், 98 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இதுவே ஒரு சிறந்த ஆல் ரவுண்டரின் டி20 சாதனையாக உள்ளது. தற்போது இதனை முறையடித்துள்ள எல்லிஸ் பெர்ரி, டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டை வீழ்த்திய முதல் நபர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

Australia cricket Pakistan Shahid Afridi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe