Advertisment

மீண்டும் கிரிக்கெட் விளையாடும் சச்சின்..? எதிர்பார்ப்பில் கிரிக்கெட் ரசிகர்கள்..!

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற சச்சின், நீண்ட காலத்துக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாட விருப்பம்தெரிவித்துள்ளார்.

Advertisment

ellys perry request to sachin

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

மெல்போர்னில் ஞாயிற்றுக்கிழமை, ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியின் இடைவெளியில், ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி வீசும் ஒரு ஓவரில் சச்சின் பேட்டிங் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா காட்டுத்தீக்கு உதவும் வகையில், முன்னாள் வீரர்கள் பங்குபெறும் கிரிக்கெட் போட்டி நாளை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணிக்கு சச்சின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனையான எல்லிஸ் பெர்ரி, கிரிக்கெட் விளையாட வருமாறு வைத்த கோரிக்கைக்கு சச்சின் சம்மதம் தெரிவித்துள்ளார்.

எல்லிஸ் பெர்ரியின் வீடியோவுக்கு பதிலளித்த சச்சின், "நான் அங்கு சென்று ஒரு ஓவர் பேட் செய்ய விரும்புகிறேன் (என் தோள்பட்டை காயம் காரணமாக எனது மருத்துவர் வழங்கிய ஆலோசனைக்கு எதிராக). இந்த செயலின் காரணமாக நாம் போதுமான பணத்தை திரட்ட முடியும்" என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நாளை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான போட்டியின் இடைவெளியின் போது எல்லிஸ் பெர்ரியின் ஓவரில்சச்சின் பேட்டிங் செய்யலாம் என கூறப்படுகிறது. இதனையடுத்து உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Australia Sachin Tendulkar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe