Advertisment

ஒலிம்பிக்கில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

elavenil valarivan

Advertisment

தமிழகத்தின் கடலூர்மாவட்டத்தைப்பூர்வீகமாகக்கொண்ட துப்பாக்கிசுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டுநடந்தஜூனியர்துப்பாக்கிசுடுதல் உலகக்கோப்பையிலும்இந்தியாசார்பாகத்தங்கம் வென்றார். அதனைத்தொடர்ந்து,2019 ஆம் ஆண்டு நடைபெற்றதுப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியில்,10 மீட்டர் ஏர்ரைபிள்பிரிவில் 251.7 புள்ளிகள் எடுத்துதங்கப்பதக்கத்தை வென்றார்.

மேலும் இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர்ரைபிள்பிரிவில் உலகின் நம்பர்ஒன்வீராங்கனையாகவும்இருந்து வருகிறார். இந்தநிலையில், ஜூலை 23 ஆம் தேதி நடைபெற இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான15 பேர்கொண்ட இந்தியத்துப்பாக்கி சுடுதல் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இளவேனில் வாலறிவனும்இடம்பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் ஒலிம்பிக்கில் பங்கேற்பதுஉறுதியாகியுள்ள சூழலில், அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத்தெரிவித்து வருகின்றனர்.

Cuddalore olympics tokyo Tamilnadu ISSF
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe