Skip to main content

அஸ்வினின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் பிராவோ!!!

Published on 18/09/2020 | Edited on 18/09/2020

 

Dwayne Bravo

 

 

கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் தொடர் நாளை அமீரகத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் தொடரின் முன்னணி அணிகளாக உள்ள இரண்டு அணிகள் மோதுவதால் இப்போட்டி குறித்தான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துவிட்டது. தோனியின் சர்வதேச ஓய்வு அறிவிப்பிற்கு பின் அவர் களம் காண இருக்கும் முதல் போட்டி என்பதாலும் ரசிகர்கள் கூடுதல் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இத்தொடரில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் பிராவோ, சென்னை அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.

 

இதுவரை சென்னை அணிக்காக விளையாடி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனை அஸ்வின் வசம் உள்ளது. அவர் சென்னை அணிக்காக 120 போட்டிகளில் விளையாடி மொத்தம் 121 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே வேளையில் தற்போது சென்னை அணியில் விளையாடி வரும் பிராவோ, 103 போட்டிகளில் விளையாடி மொத்தம் 118 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்னும் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே தேவை என்ற நிலை உள்ளதால் முதல் ஒரு சில போட்டிகளிலேயே இச்சாதனை முறியடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களுக்காக வழங்கப்படும் நீல நிறத்தொப்பியை பிராவோ இருமுறை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

“வெளியேறும் நேரம் வந்துவிட்டது..” - டுவைன் பிராவோ

Published on 05/11/2021 | Edited on 05/11/2021

 

"It's time to leave." -   Bravo

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏழாவது உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், பன்னிரண்டு அணிகள் இரு குழுக்களாக விளையாடிவருகின்றன. இதில் இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதிபெறும். இதில் நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் சரியாக விளையாடாததால், அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது. நேற்று (04.11.2021) நடைபெற்ற இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கான ஆட்டத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் பிராவோ தனது ஓய்வை அறிவித்துள்ளார். 

 

ஆஸ்திரேலியாவுடன் நாளை வெஸ்ட் இண்டீஸ் அணி மோதுகிறது. இது பிராவோவுக்கு இறுதி போட்டியாக இருக்கும். ஓய்வு குறித்து தெரிவித்துள்ள பிராவோ, "கடந்த 18 ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடியுள்ளேன். அதில் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளேன். தற்போது வெளியேறும் நேரம் வந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

சென்னை அணிக்கு கூடுதல் பின்னடைவு!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

bravo

 

 

சென்னை அணியின் முன்னணி வீரரான பிராவோ காயம் காரணமாக விலகியுள்ளது, சென்னை அணிக்கு கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

 

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-வது ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி தொடர் தோல்விகளால் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, 3 வெற்றிகள், 7 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இனி எஞ்சியுள்ள 4 போட்டிகளில் வென்றாலும், பிற அணிகளின் வெற்றி, தோல்விகளை அடிப்படியாக வைத்தே சென்னை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு தீர்மானிக்கப்படும். தரவரிசைப்பட்டியலில் முன்னணியில் உள்ள பிற அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் சென்னை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது என்றே கிரிக்கெட் வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போது இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டு பாதியில் வெளியேறிய பிராவோ, மீண்டும் களமிறங்கவில்லை. தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து பிராவோ முழுமையாக விலகியுள்ளதாக சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.