Advertisment

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் புதிய கேப்டன் யார்?

ROYAL CHALLENGERS BANGALORE

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் கடந்த 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பல்வேறு வீரர்கள் அணி மாறினர். அதன்தொடர்சியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமித்தது.

Advertisment

இந்தநிலையில் பெங்களூர் அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்களிடம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தநிலையில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக டு பிளெசிஸ் நியமிக்கப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisment

பெங்களூர் அணியின் கேப்டனாக மேக்ஸ்வெல்லை நியமிப்பதா அல்லது டு பிளெசிஸை நியமிப்பதா என ஆலோசிக்கப்பட்ட நிலையில், மேக்ஸ்வெல் தனது திருமணத்தின் காரணமாக ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் சில போட்டிகளில் விளையாடமாட்டார் என்பதால் டு பிளெசிஸையே அணியின் கேப்டனாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பெங்களூர் அணியின் புதிய கேப்டன் யார் என்பது குறித்த அறிவிப்பு இந்த வாரத்திற்குள் வெளியாகும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe