Advertisment

போதையில் இந்திய அணியின் திட்டங்களை உளறிய ரவி சாஸ்திரி!

ravi

இந்தியகிரிக்கெட்அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே ஒருநாள்மற்றும் இருபது ஓவர் போட்டிகள்முடிவடைந்துவிட்டது. அடுத்து, டெஸ்ட்தொடர் தொடங்க இருக்கிறது.டெஸ்ட்போட்டிகளில், இந்தியாவின் முக்கியப் பந்து வீச்சாளரான இஷாந்த்சர்மா, காயம்காரணமாகஇந்தியஅணியில்இடம்பெறவில்லை. உடல்தகுதியை நிரூபித்தாலும், கரோனாதடுப்பு விதிமுறைகள் காரணமாக, முதல் சிலபோட்டிகளில் அவரால்ஆடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஷமி, பும்ராவோடுஇந்திய அணியில் ஆடப்போகும்மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்யார்? என்ற கேள்விஎழுந்துள்ளது.

Advertisment

இந்தநிலையில், ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன்இயான்சேப்பல், மது அருந்தும்போது, இந்தியாவின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்யார்? எனஇந்தியா அணியின்தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தன்னிடம்கூறியதாகத் தெரிவித்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக, இயான் சேப்பல் அளித்த பேட்டி ஒன்றில், "நான் ஒருநாள் ரவி சாஸ்திரியுடன் மது அருந்தினேன். அப்போது ரவி சாஸ்திரி, உமேஷ் யாதவ் இந்தியாவின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக விளையாட வாய்ப்பு இருப்பதாகக் கூறினார்" எனக் கூறியுள்ளார். இதுதற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. ரவி சாஸ்திரி, குடிபோதையில் அணியின் திட்டத்தை எதிரணிக்கு ஆதரவானவரிடம் உளறிவிட்டதாக, அவர் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்தியரசிகர்கள், குடிப் பழக்கத்திற்காக ரவி சாஸ்திரியை, கிண்டல் செய்வதுவழக்கம் என்பதுகுறிப்பிடத்தக்கது.

indian cricket Ravi Shastri team india
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe