Advertisment

மீண்டும் வந்த பவுலர்களின் ஆதிக்கம்; நெதர்லாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபாரம்

Dominance of comeback bowlers; Indian team is great in the match against Netherlands

அக்டோபர் 16ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கிய 8-வது 20 ஓவர் உலகக் கோப்பைத்தொடர் நவம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 16 நாடுகள் இதில் பங்கேற்றுள்ளன.

Advertisment

சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வான அனைத்து அணிகளும் தங்களது முதல் போட்டியை விளையாடிவிட்ட நிலையில் இரண்டாவது ஆட்டத்திற்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் இன்று இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் 9 ரன்களில் வெளியேற ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஜோடி இணைந்து ரன்களை குவித்தது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோஹித் 39 பந்துகளில் 53 ரன்களை எடுத்தார். தொடர்ந்து அசத்திய விராட் கோலி 44 பந்துகளில் 62 குவித்தார். மற்றும் ரோஹித் சர்மாவிற்கு பின் விராட் உடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் வழக்கம்போல் அதிரடி காட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்பிற்கு 179 ரன்களை எடுத்தது.

180 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணியில் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அக்ஸர் படேல் மற்றும் அஷ்வின் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

Advertisment

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe