
இந்தியகிரிக்கெட்அணியின்முன்னாள் கேப்டனும், இந்தியகிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ்கங்குலி, மாரடைப்பு காரணமாககொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கங்குலியின் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைசெய்யப்பட்டு ஒரு அடைப்பு சரிசெய்யப்பட்டது.
கங்குலிஇதயத்தில் இருக்கும்மேலும் இரண்டு அடைப்புகளை சரி செய்யஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அவசியம் என்றாலும்அவர் தற்போது சீராகவும், இதயத்தில் வலி இல்லாமல் இருப்பதாலும்,சில நாட்களுக்கோ அல்லது வாரங்களுக்குப் பிறகோ ஆஞ்சியோபிளாஸ்டி செய்யலாம் எனமருத்துவக் குழு முடிவுசெய்துள்ளதாக, அவர்அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் தலைமை அதிகாரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், புகழ்பெற்றஇதய மருத்துவநிபுணர் தேவி ஷெட்டி,கங்குலியை பரிசோதித்தார். அதன்பிறகு அவர், 'இந்த மாரடைப்பால் கங்குலிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவர் இதயத்திற்கு எந்தச் சேதமும்இல்லை' என்றுதெரிவித்துள்ளார்.
மேலும், "இந்த நிகழ்வு அவரது வாழ்க்கை முறையையோ அல்லது ஆயுட்காலத்தையோ பாதிக்காது. அவர் மற்றவர்களைப் போல சாதாரண வாழ்க்கையை நடத்தப்போகிறார். கங்குலியின் இதயத்தில் எந்தப் பாதிப்பும்ஏற்படவில்லை என்பதால், இந்த நிகழ்வால் எந்தவொரு பின்னடைவும் இல்லாமல், கங்குலி ஒரு மராத்தானில் பங்கேற்கலாம், ஒரு விமானத்தைஇயக்கலாம் அல்லது அவர் விரும்பினால் கிரிக்கெட்டுக்கும் திரும்பலாம்.அவர் வீட்டிற்குச் சென்றவுடன் வேலை செய்ய ஆரம்பிக்கலாம்'' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், கங்குலியின் இதயத்தில் உள்ள மற்ற அடைப்புகளுக்கு மருந்து மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி என இரண்டு வாய்ப்புகள் அவரிடம் இருக்கின்றன. ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்குசெல்வது நல்ல யோசனையாக இருக்கும். நாங்கள் இதனை அவரது முடிவிற்கே விட்டுவிட்டோம். இரண்டு வாரம் காத்திருந்து கூட அவர் முடிவெடுக்கமுடியும்" எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us