13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 24-வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ராகுல் திரிபாதி மற்றும் கில் தொடக்க ஆட்டக்காரர்களாகக்களமிறங்கினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய, கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 5-வது விக்கெட்டிற்குக் களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 7 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடக்கம்.
கொல்கத்தா அணி 20 ஓவரின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு164 ரன்கள் குவித்தது.